திருக்குறள்

124.

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.

திருக்குறள் 124

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.

பொருள்:

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.

மு.வரததாசனார் உரை:

தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.